`"இதான் கடைசியாக இருக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அதிரடி உத்தரவு
`"இதான் கடைசியாக இருக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அதிரடி உத்தரவு
குழந்தை திருமணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. குழந்தை திருமணங்கள் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், வளர்ச்சிக்கான உரிமையையும் பறிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குழந்தை திருமணங்களை ஒழிக்க, அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது என்ற நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டு உத்தரவில் தெரிவித்தனர்.
Next Story