உறவினர் வீட்டில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் | CM Stalin

x

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இடத்தில், 114 கோடியே 48 லட்சம் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நேற்று மாலை 4 மணிக்கு, சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் சீர்காழி புறப்பட்டார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயிலில் ஏறிய ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.இந்நிலையில், திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் சீர்காழி சென்றடைந்தார். சீர்காழியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சீர்காழியில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் இரவில் தங்கினார்


Next Story

மேலும் செய்திகள்