தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செய்த சம்பவம் - உடனே நடந்த அதிரடி மாற்றம்

x

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தற்காலிக முதல்வராக திருநாவுக்கரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த மீனாட்சி சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அதே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பேராசிரியராக இருந்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, தற்காலிகமாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை, மருத்துவ கல்லூரி ஆராய்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்