"நீ போய் டாக்டர் படிச்சிட்டு வா உன்கிட்ட பதில் சொல்ல அவசியமில்லை" -டாக்டர் பேச்சால் கதறும் தந்தை
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனது குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டதற்கு மருத்துவர்கள் தரக்குறைவாக பேசியதாக, குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்த முகமது இர்ஃபான்- ஜக்கியா பேகம் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கை உபாத கழிக்க சிரமம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 9 மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்த நிலையில், குழந்தைக்கு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த குழந்தையின் தந்தை முகமது இர்பான், மருத்துவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் தரக்குறவாக பேசியதாக கூறப்படுகிறது. இகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முகமது இர்பான் புகார் அளித்ததால் மேலும் கோபமடைந்த மருத்துவர்கள், குழந்தைக்கு இனி சிகிச்சை அளிக்க முடியாது, எனக் கூறி குழந்தையின் பெற்றோரை மிரட்டியதாகவும் தெரிகிறது. மருத்துவமனை நிர்வாகத்திடம் மீண்டும் புகார் அளித்த போது, அவர்கள் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதால், தமிழக அரசு தனது குழந்தையை காப்பாற்ற வேண்டும்ம் என்று பெற்றோர் வேதனையுடன் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.