"கேஸ் கொடுத்ததால் ஊரே ஒன்று கூடி அடித்து.. நகைகளை திருடிய பயங்கரம்"-பாதிக்கப்பட்டவர் பரபரப்பு பேட்டி

x

சிதம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சாலிகண்டு தைக்கால் தோப்பிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர்,

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது. கே.பஞ்சகுப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயராஜா என்பவர் கையாடல் செய்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மணிகண்டன் தொடர்ந்து புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் ஆத்திரம் அடைந்த விஜயராஜா, நீர்நிலைகளில் குடியிருப்பவர்களை சேர்த்துக்கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் கொள்ளயடித்து சென்றதாக தெரிகிறது. தற்போது மணிகண்டன் வீட்டை பொதுமக்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்