சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டிடம்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Natarajar Temple

x

சிதம்பரம் நடராஜர் கோவிலின் 4 கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் 2வது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி 100 அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, கோயில் தீட்சிதரான நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் நந்தவனம் அமைக்க 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதுடன், பொது தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பிலும், தமிழக தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்