செட்டிநாடு சிக்கனில் புழு.. "உணவகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்"
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த
மெக்கானிக்கான சௌந்தர்ராஜன் என்பவர்,
தனது குழந்தைகளுக்கு முடிச்சூர் சாலையில் உள்ள பிரியாணி கடையில் இருந்து செட்டிநாடு சிக்கன் பார்சலாக வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பார்சலை திறந்து பார்த்தபோது, சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பார்சலை மீண்டும் கடைக்கு எடுத்து சென்று உணவக உரிமையாளரிடம் காட்டியுள்ளார். அப்போது தங்களுக்கு இதுக்கும் எந்த வித சம்பதமும் இல்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சூடாக கொடுக்கப்பட்ட செட்டிநாடு சிக்கனில் உயிரோடு எப்படி புழு வரும் என அவர் கேட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த சௌந்தர்ராஜன் தாம்பரம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்தை முற்றுகையிட்டனர்.