திருமணத்தை மீறி இருந்த உறவு - வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவனுக்கு அதிர்ச்சி

x

திருமணத்தை மீறி இருந்த உறவு - வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவனுக்கு அதிர்ச்சி

ஆவடி அருகே, கணவன், மனைவி தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த அண்ணாமலை நகரை சேர்ந்த பிரகாஷ், காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், தேவி என்ற பெண்ணுடன் பிரகாஷ் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சத்யா கண்டித்தபோதிலும்,

தேவியிடம் பிரகாஷ் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. வேலை முடித்து வீட்டிற்கு பிரகாஷ் வந்தபோது, சத்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்தது கண்டு மனவிரக்தியில் பிரகாஷ்-ம் தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாகியும் கணவன் மனைவி வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்