"கடந்த முறை நடந்தவை எல்லாம் பாடம்" - விநாயகர் சதுர்த்திக்கு போலீசாரின் மாஸ்டர் பிளான் | Chennai
சென்னையில் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றுள்ளதாக சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கார் தெரிவித்துள்ளார். கடந்த 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைகள், நீலாங்கரை கடற்கரை, பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 இடங்களில் கரைக்கப்பட்டது. இதையொட்டி, அப்பகுதிகளில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காசிமேடு பகுதியில், சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கட் கார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி விநாயகர் சிலை கரைப்பு பணி நடைபெற்றதாக தெரிவித்தார்.