தமிழகத்தை பரபரப்பாக்கிய ரயில் விபத்து.. புதிய தகவல்

x

தமிழகத்தை பரபரப்பாக்கிய ரயில் விபத்து.. புதிய தகவல்

கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக, ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், ரயிலை கவிழ்க்க சதி என்ற மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த 11- ஆம் தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாக்மதி விரைவு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக, ரயில் ஒட்டுநர், துணை ஓட்டுநர், கவரப்பேட்டை ரயில்நிலைய மேலாளர் உள்பட 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமல்ல என்றும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கில் 154 வது பிரிவு நீக்கப்பட்டு, ரெயிலை கவிழ்க்க சதி என்ற இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 150-ன் கீழ் ரெயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்