6 பேரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கு... நாட்டையே அதிரவிட்ட தமிழக சம்பவத்தில் அரசு முக்கிய தகவல்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ சங்கரின் சகோதரர் ஆட்டோ மோகன் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் ஆறு பேரை அடுத்தடுத்து கொன்று, வீட்டுக்குள் புதைத்ததாக ஆட்டோ சங்கருக்கு எதிரான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ மோகனை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்த விசாரணையின் போது 2023 செப்டம்பர் மாதம் ஆட்டோ மோகன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Next Story