விண்ணை தொட்ட 6000 பள்ளி மாணவர்களின் நம்பிக்கை... சென்னை மண்ணில் புதிய சகாப்தம்

x

செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ள மிஷன் ரூமி ராக்கெட் சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது...

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் 'ஸ்பேஸ் ஸோன் இந்தியா' நிறுவனம்

செயற்கைக் கோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ரூமி என்ற மினி ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 80 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் சுமார் 6 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பணியாற்றியுள்ளனர்... காலநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு , காற்றின் தன்மை தொடர்பான தரவுகளை சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக்கோள்கள்..

50 விதமான ஆய்வு சாதனங்களுடன் ரூமி ராக்கெட் காலை 7.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது...

மூன்று செயற்கைகோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்திவிட்டு அதில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் ரூமி ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும். நடமாடும் ஏவுதளம் மூலமாக இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்