"தலைநகருக்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டோம்"

x

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் நிவாரண உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்...

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.. இந்நிலையில் இன்று அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள் பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட், குடிநீர் பாட்டில்கள் என 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று வாகனத்தில் அனுப்பி வைத்தார்...

தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி, சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், ஆயிரத்து 380 கிலோ அரிசி, 40-கிலோ பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை லாரிகள் மூலம் அனுப்பினார்...

திருவாரூரில் ஆட்சியர் சாருஸ்ரீ, நன்னிலம் உள்ளிட்ட 7 பேரூராட்சிகள் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும், 3 நகராட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றின் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஒரு லாரியிலும் அனுப்பி வைத்தார்...

நெல்லையில் ஆட்சியர் கார்த்திகேயன் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட் பாக்கெட்டுகள், சேமியா, ரவா, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பெட்சீட், மருந்து பொருட்கள் என மொத்தம் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை 3 லாரிகள் மூலம் சென்னைக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்