சென்னை தப்பியதும்.. இரக்கம் காட்டிய காய்கறிகள் பேரானந்தத்தில் மக்கள்

x

சென்னை தப்பியதும்.. இரக்கம் காட்டிய காய்கறிகள்

பேரானந்தத்தில் மக்கள்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது..தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடபட்டது இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கிய நிலையில் காய்கறிகளின் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது...

குறிப்பாக தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது...இந்நிலையில் தற்பொழுது தற்காலியின் விலை கிலோ 30 ரூபாய் குறைந்து, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... அதேபோல் பிற காய்கறிகளின் விலை கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.

வெங்காயம் கிலோ 60 ரூபாய் வரையிலும், உருளை 45 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 80 ரூபாய் வரையிலும்,ஊட்டி கேரட் 50 ரூபாய் வரையிலும் மற்றும் கர்நாடக கேரட் 30 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது...

அதேபோல் பீன்ஸ் 160 ரூபாய் வரைக்கும், கர்நாடக பீட்ரூட் 30 ரூபாய் வரைக்கும், ஊட்டி பீட்ரூட் 65 ரூபாய் வரைக்கும், வெண்டை 40 ரூபாய் வரைக்கும், கத்திரி 30 ரூபாய் வரைக்கும், பாகற்காய் 50 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது...


Next Story

மேலும் செய்திகள்