தாண்டவம் ஆடிய மழையின் எதிரொலி.. தயார் நிலையில் இருக்கும் இந்திய கடலோர காவல்படை
வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகம், ஆந்திரா என தென் மாநிலங்களுக்கு உதவ இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டலம் சார்பில் 29 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தலா 148 வீரர்களை கொண்ட குழுக்கள் படகுகள், உயிர்காப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள், ஜாக்கெட்டுகளுடன் தயார் நிலையில் உள்ளன. 10 குழுக்கள் சென்னை மாநகருக்கென்று பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டு இருக்கிறது. வானிலையை கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கையையும் விடுக்கப்படுகிறது.
Next Story