திடீர் திடீரென மாறும் கிளைமேட்.. விடிந்ததும் சென்னை மக்களுக்கு ஷாக்
கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிக பலத்த மழையும், தென் மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாப்பூர், அண்ணா சாலை, அடையார், கிண்டி, வடபழனி, எழும்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நள்ளிரவு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Next Story