மிரட்டி எடுத்த கனமழை - சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு
மிரட்டி எடுத்த கனமழை - சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இதுவரை சாய்ந்த 77 மரங்களும் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாகவும், மழைநீர் தேங்கியுள்ள 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆயிரத்து 223 மோட்டார் பம்ப் மழைநீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டதாகவும், 204 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரத்து 368 பேர் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், மொத்தமாக நிவாரண முகாம்களில் தங்கிய 11 லட்சத்து 84 ஆயிரத்து 410 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.