மழை காலத்தில் பால் சப்ளை.. வெளியான தகவல்
சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து 5 லட்சம் லிட்டர் பால் விநியோகித்துக்காக அனுப்பப்பட்டுள்ளதாக உற்பத்தி பிரிவு துணை பொது மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வழக்கமாக நான்கு லட்சம் லிட்டர் சப்ளை செய்யப்படும் சூழலில், மழை காரணமாக தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில் கூடுதலாக பால் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Next Story