``இனி குறி வச்சா... தப்பவே தப்பாது..'' இந்தியாவையே திரும்ப வைத்த சென்னை MIT...

x

இதுவரை தயாரிக்கப்பட்ட டிரோன்கள் புறப்பட்ட இடத்திலிருந்து சென்று திரும்பும் வகையில், தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் அந்த ட்ரோன் தரையிறங்கும் வகையிலான தொழில்நுட்பத்தை அண்ணா பல்கலைக்கழகம், எம்ஐடி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது தரையிறங்கும் இடத்தில் பவர் மார்க் அல்லது கியூ ஆர் கோடு இருக்கும் பட்சத்தில் ஆட்டோமேட்டிக்காக இந்த ட்ரோன்கள் தரையிறங்கும். இதனை புத்திசாலித்தனமான தரையிறக்கம் என தெரிவிக்கின்றனர் இதற்கான காப்புரிமை கோரி, மத்திய அரசிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக எம் ஐ டி பேராசிரியர்கள், மாணவர்கள் குழுவினர் விண்ணப்பித்தனர். ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்து, தற்போது, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. குரோம்பேட்டை எம் ஐ டி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் செந்தில்குமார், தாமரைச்செல்வி, முகமது ரஷீத், முத்து செல்வம் ஆகிய நான்கு பேரின் பெயரில் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்