மிஸ் யுனிவர்ஸ் போட்டி..உற்சாகமாய் பங்கேற்ற தமிழக பெண்கள்
சென்னை, தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது...நடப்பு ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி மெக்சிகோவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பலரும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இதற்கான தகுதி சுற்றில் தமிழகத்தில் இருந்து 70 பேர் பங்கேற்றனர். இவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபர், டெல்லிக்கு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக அனுப்பப்படுவார். அவர்களில் வெற்றிபெறும் ஒருவர், இந்தியாவின் பிரதிநிதியாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்பர்.
Next Story