சென்னையில் ரூ.100 கோடி அரசு நிலத்தை முடக்கிய தனியார்..?
சென்னையில் 145-ஆவது வார்டில் அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தனியாரால் முடக்கப்பட்டிருப்பதாக அந்த வார்டின் கவுன்சிலர் சத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரவாயலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனது வார்டில் 1.14 ஏக்கர் நிலம் கடந்த 50 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்திடம் இருந்து வருவதாக கூறினார். அந்த இடத்தில் 800 சதுர அடியில் சுகாதார மையம் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்தபோது, போதிய இடமில்லை என தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்
Next Story