அதிகாலையில் கதவை தட்டும் சத்தம்.. திறந்ததும் அலறிய பெண்.. சென்னையில் பகீர்
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணின் கணவர், அதிகாலையில் பேப்பர் போடும் வேலை செய்து வருகிறார். இவர் அதிகாலை பேப்பர் போட சென்றவுடன், கதவை மர்மநபர் ஒருவர் தட்டியுள்ளார். அந்த பெண் கதவை திறந்தவுடன், மர்ம நபர் உள்ளே புகுந்து, அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் கையை தட்டிவிட்டு சத்தம் போடவே, மர்ம நபர் பயந்து ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், சிசிடிவி வாயிலாக, அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் சிக்கினார். அவரை பிடிக்க முயன்ற போது, பார்த்திபன் தப்பிக்க முயன்றார். அப்போது, அவர் கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
Next Story