ஒரே ஆண்டில் ரூ. 513 கோடி திரட்டி சாதனை படைத்த சென்னை ஐஐடி
ஐஐடி முன்னாள் மாணவர்கள் 16 பேர், 32 கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு 2023-24ம் நிதியாண்டில் 513 கோடி ரூபாய் நிதி திரட்டி சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது... 135 விழுக்காடு அளவிற்கு ஐஐடிக்கு கூடுதலாக நன்கொடை கிடைத்துள்ளது... அதுமட்டுமன்றி, முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் கூட்டாளர்களிடம் இருந்து 717 கோடி ரூபாய் நிதியுதவிக்கான புதிய உறுதிமொழிகளையும் சென்னை ஐஐடி பெற்றுள்ளது... இதன்மூலம் ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Next Story