பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய பிரபல நிறுவனம் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

x

ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்

விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 500 நாட்களுக்கு மேல் சவுந்தரராஜன் சிறையில் இருப்பதையும், அவரது உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். உடல் நல பிரச்னைக்கு

சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சவுந்தரராஜனுக்கு ஜாமின்

வழங்க காவல்துறை சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி

செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்