மலைபோல் குவிந்து கிடக்கும் குரோமிய கழிவுகள் - ஐகோர்ட் போட்ட உத்தரவு
மலைபோல் குவிந்து கிடக்கும் குரோமிய கழிவுகள் - ஐகோர்ட் போட்ட உத்தரவு
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி, தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகள் மலை போல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறி, பாமகவை சேர்ந்த பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 7ஆம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், குரோமிய கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் தமது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 10 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.