கடும் எச்சரிக்கை வழங்கி சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு | Chennai High Court
கடும் எச்சரிக்கை வழங்கி சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு | Chennai High Court
கோவையில், யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகள், ஜூலை 5 வரை தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், விசாரணையை ஜூலை 5 வரை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகளை பொறுத்தவரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், கல்லார் பகுதியில், யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டு, 3 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து, தமிழக அரசு கருத்து தெரிவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.