சேலம் கலெக்டருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராம பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றிய மூர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டி, பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை வேறு இடத்தில் பணியமர்த்துவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி, கடந்த 2023 செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூறி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், மாவட்ட ஆட்சியரை ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தார்


Next Story

மேலும் செய்திகள்