குத்துச்சண்டை 14 வயது மாணவர்கள் பிரிவில் ஏற்பட்ட மாற்றம் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சி.ஐ.எஸ்.சி.இ தேசிய விளையாட்டு போட்டிகளில்,
குத்துச் சண்டை போட்டியில் இருந்து, 50 கிலோவுக்கு
அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கப்பட்டது.
இதை எதிர்த்து அல்பெரிக் அபய் தரப்பில் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த
பிரிவை நீக்கியது பாரபட்சமானது என சி.ஐ.எஸ்.சி.இக்கு
கண்டனம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் செப்டம்பர்
13ம் தேதி நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளில், 50
கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்களையும்
அனுமதிக்கும்படி உத்தரவிட்டது.
Next Story