பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் செயலாளராக இருந்த சரவணன், பணி ஓய்வு பெறும் நாளில் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் துணைவேந்தர் ஜெகநாதன் செயலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு பணி இறக்கம் செல்லாது என அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
Next Story