#BREAKING || ஐகோர்ட்டில் ஜாபர் சாதிக் கொடுத்த மனு.. ஒரே அடியில் ஆஃப் செய்த ED

x

"சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல". சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்.

வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது. ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை, வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை.

தன் மீது தவறாகவும், உள்நோக்கத்துடனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது - ஜாபர் சாதிக் மனுவில் தகவல். மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதங்களுக்காக விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்