"கோவை வனப்பகுதிகளில்.." - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

x

சீல் வைக்கப்பட்ட பிறகும் கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற் சூளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த‌து. அப்போது, சட்டவிரோதமாக செங்கற்சூளைகள் செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத‌து குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்த பிறகும், 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், உதவி இயக்குநர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பெயரும் இல்லை... ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும் கூறினர். சட்டவிரோதமாக 14 செங்கற்சூளைகள் செயல்படும் பகுதிகளிலும், செம்மண் கொள்ளை நடக்கும் பகுதிகளிலும் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவர் நாராயணனுக்கு உத்தரவிட்டனர். மாவட்ட லோக் அதாலத் தலைவருக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்