திருட்டு வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவரிடம் நகை பறிப்பு - போலீசார் 2 பேர் மீது பாய்ந்த சட்டம்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆலந்தூர்பாக்கத்தை சேர்ந்த அன்சாரி சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர் தனது வீட்டில் இருந்த நகை காணாமல் போனதாக, சித்தி தரப்பில், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அன்சாரியின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணையின் போது போலீசார் தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக அன்சாரியின் தந்தை முகமது ரஃபீக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், திருட்டு நகைக்கு பதிலாக போலீசார் தங்களது நகைகளை பறித்து கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், திருடப்பட்ட நகையை கண்டுபிடிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நகையை பறித்து கொடுத்தது தவறு எனத் தெரிவித்துள்ளார். எனவே, அப்போதைய ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு மற்றும் துணை ஆய்வாளர் கன்னியப்பன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்