``ஆசிரியர் வேலை..'' பட்டதாரிகளுக்கு இடியை இறக்கிய உத்தரவு | Court
பள்ளிக்கல்வித்துறையில் தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடங்களை நிரப்பவில்லை எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், 2014 -15-ம் ஆண்டு முதல் 2024-25 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 130 பணியிடங்கள் உள்ளதாகவும், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
Next Story