கோர்ட் உத்தரவை மீறிய விவகாரம்... கடுகடுத்த ஹைகோர்ட்... பறந்த அதிரடி உத்தரவு
ஆவடியில் வாங்கிய நிலத்தை கணவர் நாராயணன் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து பதிவு செய்ய மறுத்த ஆவடி சார் பதிவாளருக்கு எதிராக சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். செட்டில்மெண்ட் ஆவணங்களை பதிவு செய்ய மறுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறும் வகையில் ஆவடி சார் பதிவாளர் செயல்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 19ம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஆவடி சார் பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்
Next Story