லாட்டரி அதிபர் மார்டின் வழக்கு... திடீர் திருப்பம் - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்துவைக்க அனுமதியளித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். இதனை அடுத்து மோசடி வழக்கை மத்திய குற்றப்பிரிவும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை அமலாக்கத்துறையும் தொடர்ந்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story