விஷ சாராய மரணங்கள்..! - அதிமுக, பாமக தொடர்ந்த வழக்கு... நாள் குறித்த ஹைகோர்ட்

x

குழுவுக்கு மாற்றக் கோரி, அதிமுக சார்பிலும், பாமக சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். வழக்கு விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என பாமக சார்பில் ஆஜரான என்.எல் ராஜா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதகாவும் கூறினார். இதைத்

தொடர்ந்து நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்