மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - தலைகீழாக மாறிய தீர்ப்பு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவர் சுப்பையா, 2013 செப்டம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்களான வழக்கறிஞர் பாசில் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021ல் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டதாக கூறி, 7 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வேறு வழக்குகளில் தொடர்பில்லை என்றால் ஒன்பது பேரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்