சென்னை சாலையில் திடீரென நின்ற மூச்சு...கதறி அழுது ஓடிவந்த மனைவி..மனதை நொறுக்கும் காட்சி
சென்னை சாலையில் திடீரென நின்ற மூச்சு...கதறி அழுது ஓடிவந்த மனைவி..மனதை நொறுக்கும் காட்சி
சென்னை ஆவடியில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான 25 வயது இளைஞர், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஆவடி அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒருவர் உள்ளார். சம்பவத்தன்று ஆவடி அடுத்த குறிஞ்சி தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில், நான்கு பேருடன் சேர்ந்து கோபிநாத் ஈடுபட்டிருக்கிறார். சாக்கடைக்குள் இருந்த அடைப்பை சீர் செய்ய, ஜெட் ராடிங் இயந்திரத்தை செலுத்த இறங்கிய கோபிநாத், சாக்கடைக்குள்ளே விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story