மத்திய அமைச்சரை சூழ்ந்த மக்கள்... "எப்படி அனுமதி கொடுத்தாங்க..?" ஆதங்கத்தோடு பேசியதால் பரபரப்பு
வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த மத்திய இணை அமைச்சரிடம் தங்களது குறைகளை பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கத்துடன் கூறியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். வரதராஜபுரம் பகுதியில் செல்லும் அடையாறு ஆற்றின் கால்வாயை பார்வையிட்ட அவர், பாதிப்பு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, மத்திய இணை அமைச்சரிடம் அப்பகுதியில் கால்வாய் வசதி சரியாக இல்லை என்றும், நீர் வரத்து குறித்து முறையாக அதிகாரிகள் அறிவிக்கவில்லை என்றும் ஆதங்கத்துடன் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
Next Story