"சென்னையில் இன்னும் 19 இடங்களில் மட்டும்தான்.. " அமைச்சர் கே.என்.நேரு சொன்ன தகவல்
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை நிவாரண களப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், சீரமைப்பு பணிகள் அனைத்தும் இன்று மாலைக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.
Next Story