சென்னை கடலை அழித்த மனிதன்.. கோபத்தில் பழிதீர்க்க வரும் இயற்கை.. ICU-வில் 78 கிமீ.. தப்பிக்க ஒரே வழி

x

சென்னையில் ஏற்படும் பெருவெள்ளத்திற்கு வளர்ச்சி திட்டங்களே காரணம் என குற்றஞ்சாட்டும் பிரபல நீரியியல் நிபுணர் ஜனகராஜன், கடலின் தரத்தையே மனிதர்கள் சீர்குலைப்பதாக பகீர் கிளப்பியுள்ளார். இதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையை வெளுத்து வாங்கிய மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட சூழலில், பேராபத்துகளின்றி தப்பித்தது சென்னை... ஆனால், இது வெறும் டிரெய்லர் மட்டுமே என கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த காலகட்டங்களில் வெள்ளத்தை சமாளிக்க எண்ணற்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

இதில் ஆபத்பாந்தவனாக மழைநீர் வடிகால்கள் பார்க்கப்படும் நிலையில், வடிகால்களை பராமரிப்பது மிக அவசியம் என வலியுறுத்துகிறார் நீரியியல் நிபுணர் ஜனகராஜ்... மற்ற நகரங்களை போல அல்லாமல், சென்னை கடல் மட்டத்திற்கு ஏற்ப இருப்பது தான் பிரச்சனை என்றும் கூறுகிறார்..

இவையனைத்தையும் சீர் செய்ய வருடம் முழுவதும் பராமரிப்பு பணிகளை செய்வது மட்டுமே ஒரே தீர்வு என்பது நீரியியல் நிபுணர் ஜனகராஜின் கருத்தாக உள்ளது.

மேலும் கூவம், அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளை அழகுப்படுத்துவது தேவையில்லாத வேலை என விமர்சித்த அவர், அதனை சீர் படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளப்பெருக்குக்கு அடுத்தப்படியாக கடல்நீர் மட்ட உயர்வு தலையாய பிரச்சனையாக உள்ள சூழலில், புலிக்காட் பகுதி முதல், முட்டுக்காடு வரையான 78 கிலோ மீட்டர் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான் என பகிர் கிளப்பியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் மனிதர்கள் கடலின் தரத்தை குலைத்ததே காரணம் என சாடுகிறார் ஜனகராஜ்..

இயற்கை கொடையான மழையை, வெள்ளம் வெள்ளம் என்று வெறுப்பதற்கு மாறாக, அதனை வரவேற்கவும், சரியான முறையில் அதனை கையாளக்கூடிய திறன்களை வளர்த்தெடுக்கவும் அனைவரும் முன்வர வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்