மின்சார ரயில்கள் ஓடுமா? ஓடாதா? - சென்னையே குழப்பத்தில்.. இதோ தெளிவான விளக்கம்
மின்சார ரயில்கள் ஓடுமா? ஓடாதா? - சென்னையே குழப்பத்தில்.. இதோ தெளிவான விளக்கம்
55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள தெற்கு ரயில்வே, வழக்கம் போல் பகல் நேர ரயில்கள் இயங்கும் என தெரிவித்துள்ளது.
தாம்பரம் பணிமனை மேம்பாட்டு பணி காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 14 வரை மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் பகல் நேர ரயில் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே அறிவித்தது போல், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை ரயில் சேவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 27, 28-ம் தேதிகளில் மின்சார ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 3 முதல் 14 வரை, ஏற்கனவே அறிவித்தது போல 55 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.