சென்னையில் அதிர்ச்சி சம்பவம் -திடீரென நடுவில் நின்ற லிஃப்ட்-முதியவருக்கு நடந்த கொடூரம்-கதறும் மனைவி

x

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் லிஃப்ட் பழுதானதால், 6ஆவது மாடியில் இருந்து முதியவர் விழுந்து உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பிளாக் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இட்லி கடை வைத்துள்ள இவர், பத்தாவது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, மாலை 5 மணியளவில் லிப்டில் இறங்கியுள்ளார். 7ஆவது மாடியில் லிப்ட் பழுதாகி நின்ற நிலையில், உடனடியாக வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் மேலே சென்றுள்ளனர். அதற்குள் கீழே இறங்க முயற்சித்த கணேசன், கால் தவறி லிஃப்ட் சேம்பரில் விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சென்று உடலை மீட்ட காவல்துறையினர், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில், இறந்தவரின் உடலை பார்க்கவும், ஆம்புலன்சில் செல்லவும் காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளதாக உறவினர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அடிக்கடி லிஃப்ட் பழுதாவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்