கோயம்பேடு, தி.நகரில் பிரமாண்ட அப்டேட்.. சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு
சென்னை மாநகராட்சியை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 20 கோடி ரூபாய் மதிப்பில், 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிகழ்வுகளின் போது, அவசர கால நடவடிக்கையை மேம்படுத்தி, அபாயத்தை குறைக்கும் வகையில், வெள்ளக் கட்டுப்பாட்டு வரைபடம் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகாலும்...
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர்சாதன சேமிப்புக் கிடங்கும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 10 கோடி ரூபாய் மதிப்பில், தியாகராய நகர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்தமாக 46 பிரிவுகளில் சென்னையை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.