`இன்றோடு ஓவர்... நாளை முதல் சென்னையில்'... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

x

சென்னையில் உள்ள விதிமீறல் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், நாளை முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிட்டு, மாநகராட்சி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. நாளை முதல், விதிமீறல் விளம்பர பேனர்களை, மாநகராட்சி பணியாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்