நடுரோட்டில் தனது பைக்கை தானே தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. காரணத்த கேட்டா நீங்களே கடுப்பு ஆகிடுவீங்க
சென்னையில் நடுரோட்டில் தனது பைக்கை தானே தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. காரணத்த கேட்டா நீங்களே கடுப்பு ஆகிடுவீங்க
லோன் கட்ட பெற்றோர் பணம் தராததால் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தனது 2 சக்கர வாகனத்திற்கு தானே தீ வைத்து கொளுத்திய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த முகேஷ் தனது இரு சக்கர வாகனத்தை நடுசாலையில் நிறுத்தி வைத்து பெட்டோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் பூந்தமல்லி - ஆவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயில் கருகி கிடந்த பைக்க அருகே நின்று கொண்டு இருந்த முகேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வேலைக்கு செல்லாமல் இருந்ததால் தன்னால் தவணை தொகையை கட்ட முடியவில்லை எனவும், வீட்டில் கேட்டும் பெற்றோர் பணம் தராததால் ஆத்திரத்தில் தீ வைத்து கொளுத்தியதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.