கழிவறையில் சிக்கிய தடயம்.. அதிர்ச்சியில் உறைந்த சென்னை ஏர்போர்ட்
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் இரண்டு பேர் கழிவறையை சுத்தம் செய்யும் கருவிகளை வெளியே எடுத்து சென்றனர். அந்த கருவிகளை சோதனையிட்டதில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2.2 கிலோ தங்க பசை இருந்தது. பிடிபட்ட இருவருக்கும் கடத்தல் காரர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. துபாயில் இருந்து வந்த கடத்தல்காரர் கழிப்பறையில் தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு, இலங்கை செல்லும் விமானத்தில் சென்றுவிட்டார். திட்டமிட்டபடி கழிவறை வந்த ஊழியர்கள் அதனை வெளியே எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Next Story