பிரபல பெண்கள் கல்லூரியில் திருவிழா.. வண்ணம் பூசிய வண்ணத்துபூச்சியாய் மாணவிகள்.. சென்னையில் மண்வாசம்

x

காவிரித் தாயைக் கொண்டாடித் தீர்க்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு காவிரி கரையோர மாவட்டங்களில் ஒருபுறம் களைகட்டி இருக்க... மறுபுறம் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்தனர்...

ஆடிப்பெருக்கு என்றால் என்னவென்றே தெரியாத 2கே கிட்ஸுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் இந்த மகளிர் கல்லூரி மாணவிகள்...

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சேலையணிந்து விழாவில் கலந்து கொண்ட மாணவிகளால் கல்லூரியே கலர்ஃபுல்லாக மாறியது...

பரதநாட்டியமோ... குத்தாட்டமோ... தங்கள் நளினத்தாலும்... துடிப்பான நடனத்தாலும் காண்போரை மிரள வைத்து விட்டனர் இந்த மாணவிகள்...

நீரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் முளைப்பாரி... கரகாட்டம்... ஒயிலாட்டம்... கும்மி... உறியடி... கோலப்போட்டி... மைம்...என போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் களைகட்டின...

ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் 3000 மாணவிகளும் ஒன்றுகூடி ஆடிப்பாடி மகிழ்ந்ததால் கல்லூரி வளாகமே கலகலப்பாக இருந்தது...

மாணவிகள் ஒருபுறம் கலக்கிக் கொண்டிருக்க...அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் ஆசிரியர்களும் கலக்கல் நடனமாடி மகிழ்ந்தனர்...

பாசத்துடன் ஒருவருக்கொருவர் உணவூட்டி மகிழ்ந்ததைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தங்கள் கல்லூரி காலம் நினைவுக்கு வந்து போகும்...


Next Story

மேலும் செய்திகள்