100 கி.மீ வேகம்.. உடைந்த 51 B இண்டிகேஷன்.. ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா?

x
  • பாக்மதி எக்ஸ்பிரஸ் 51B என்ற தண்டவாள குறியீட்டு பகுதிக்கு வந்தபோது மெயின் லைனுக்கு மாற்றாக லூப் லைனுக்குள் நுழைந்து சரக்கு ரயிலில் மோதியுள்ளது. அப்போது ரயிலின் வேகம் 100 கிலோ மீட்டரிலிருந்து 70 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்த விசாரணை தீவிரமாக்கப்பட்டிருக்கும் வேளையில், 51B தண்டவாள குறியீட்டு பகுதியில் பாயிண்ட் இண்டிகேஷன் மெஷின் உடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் இருந்து மாறி லூப் லைனில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிக்னல் தரவுகள் அடிப்படையில் மெயின் லைனில் ரயில் தொடர்ச்சியாக சீரான வேகத்தில் செல்ல சிக்னல் வழக்கம் போல் வழங்கப்பட்டதாகவும் ஆனால் ரயில் மெயின் லைனுக்கு மாறாக லூப் லைனில் நுழைந்து இருக்க கூடும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகு விபத்துக்கான காரணம் குறிக்க தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்