சென்னையில் இன்று டிராபிக் சேஞ்ச்.. இந்த வழியா போய் மாட்டிக்காதீங்க
78 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் 7 படைப்பிரிவினர் வழங்கும் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதற்காக கடந்த 5ஆம் தேதி முதல் ஒத்திகை நிகழ்வும், 9ஆம் தேதி இரண்டாவது ஒத்திகையும் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி ஒத்திகை நிகழ்வு தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதன் பொருட்டு போர் நினைவு சின்னத்திலிருந்து ரிசர்வ்
வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.
Next Story